தலைப்புச் செய்திகள் (11-01-2024)

*முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு … அதிமுக கொடி, கட்சி பெயர், வேட்டி பயன்படுத்த தடை எனும் முந்தைய தீர்ப்புக்கு தடை கேட்டு அவர் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்து தீர்ப்பு.

*கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு.. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் மனைவி பெயரில் பங்களா கட்டி வரும் அசோக் குமார் கடந்த ஆறு மாதங்களாக தலைறைவாக உள்ளார்.

*அசோக் குமார் கட்டிவரும் வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, அங்குலம் அங்குலமாக அளந்து ஆய்வு … கரூர் ரெட்டிபாளையத்தில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

*அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தீர்ப்பு … சட்ட விரோத பணப் பரிவரித்தனை வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது அமலாக்கத் துறை.

*தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜனவரி 13- ஆம் தேதி சந்திக்கிறது … தமிழ் நாட்டிற்கு மழை நிவாரணத்திற்கு போதிய நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்துவதற்காக சந்திக்க நடவடிக்கை.

*அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி … நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே போட்டியிட இடம் தரப்படும் என்றும் தகவல்.

*டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முடிவுகள் வெளியீடு … நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று வெளியானது…

*வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது…. 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிப்பு.

*தமிழ் நாடு அரசு ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை மட்டும் நியமித்தால் கல்வித் தரம் எப்படி உயரும் என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி … கல்வித் துறையில் நிரப்ப வேண்டிய இடங்களை உடனே நிரப்புமாறு வலியுறுத்தல்.

*பாஜக ஆட்சிக்கு வந்ததும் கருப்பு பணத்தை மீட்டு சரியாக வரி கட்டுபவர்களுக்கு 15% தருவேன் என்று பேசிய மோடி இப்போது என்ன செய்கிறார் என்று தென்னிந்திய ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர் கேள்வி … மோடி, நாட்டின் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கில் வரியை தள்ளுபடி செய்து கொண்டிருப்பதாகவும் புகார்.

*பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 – ஆம் தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18- ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள்… தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்.

*தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் பதவி ஏற்பு …. ஆர். சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த காரணத்தால் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் பி.எஸ்.ராமன்.

*நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய மூவர் கைது…. காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.

*திருச்சி நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் தீர்ப்பைக் கேட்டதும் தப்பியோட முயற்சி … முதல் மாடியில் இருந்து குதித்தால் கால் முறிந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதி.

*அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு …. 200 நாட்கள், அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை.

*கடலூர் மாவட்டம் மதலப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் லஞ்சம் வாங்கிய போது கைது…பட்டா பெயர் மாறுதலுக்காக ரூபாய் 40,000 லஞ்சம் வாங்கியதாக புகார்.

*நடப்பாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் அலங்காநல்லூரில 6,099, பால மேட்டில் 3,677, அவணியாபுரத்தில் 2,400 காளைகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்… போட்டிகளில் வெற்றி பெரும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

*நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31- ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9- ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல் .. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்ய முடிவு.

*ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு இதுவரை 5,000 பேர் கருத்து … பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு ராம்நாத் குழு கேட்டிருந்தது.

*மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இரணடு இடங்களை மட்டும் ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு … அதிக சீட்டுகளை காங்கிரஸ் கேட்பதால் இநதியா கூட்டணியில் சிக்கல்.

*காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது … ஸ்ரீநகரில் இருந்து பாரமுல்லா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மெகபூபா காயமின்றி உயிர் தப்பினார்.

*விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை வைத்து மதிப்பிடப்பட்ட உலகத்தின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற ஆய்வில் பிரான்ஸ் , ஜெர்மனி, இத்தாலி , ஸ்பெயின்,சிங்கப்பூர் ஆகிய ஆறு நாடுகளுக்கு முதலிடம் … இந்த ஆறு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

*உலகத்தில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவுக்கு 80 – வது இடம் … இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும்.

*பப்பவுா நியூகினியா நாட்டில் ஊதியம் குறைக்கப்படும் என்று அரசின் அறிவிப்பால் போலீசார் கடைகளை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டதால் 15 பேர் பலி … ராணுவம் களத்தில் இறங்கியதால் ஓரளவு அமைதி திரும்பியது.

*நாமக்கல் கோயிலில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

*அன்னபூரனி படத்தில் ராமரை அவமதித்தாக நடிகை நயன்தாரா மற்றும படத்தின் இயக்குநர் உட்பட 7 பேர் மீது புகார் … மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் போலீசார் வழக்குப் பதிவு.

*போலீஸ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து அன்னப்பூரணி படத்தை தமது தளத்தில் இருந்து நீக்கியது நெட்பிளிக்ஸ்… சர்ச்சைக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு வெளியிடப்படலாம் என்று தகவல்.

*தமிழ்நாட்டில் கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15- ஆம் தேதியுடன் முடிவடையும் என்று வானிலை மையம் தகவல் … இந்த காலகட்டத்தில் சராசரி மழை பதிவான 44 செ.மீ.யை விட 2 செ.மீ அதிகம் பெய்து உள்ளதாக விளக்கம்.

*வானிலை மைய விளக்கத்தின் படி கூடுதலாக 2 சென்டிமீட்டர் மழை பெய்திருந்தாலும் தமிழ்நாட்டின் முக்கிய அணயைான மேட்டூர் நிரம்பவில்லை, பெரிய ஏரியான மதுராந்தகம் காய்ந்து கிடைக்கிறது … இந்த ஆண்டு கன மழை என்பது சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் மட்டுமே.

உண்மையான செய்திகளை அறிய இணைப்பை அழுத்தி தினக்குழுல் வாட்ஸ் அப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யலாம். Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *