தலைப்புச் செய்திகள் (09-01-2024)

*தமிழ் நாட்டில் அரசு பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் குறைந்தபட்சம் 20 விழுக்காடு பேருந்துகள் ஓடவில்லை என்று கருத்து … பெரும்பாலான வழித்தடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல்.

*பொங்கல் பண்டிகை நேரமென்பதால் பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று ஐஎன்டியூசி தொழிற்சங்கம் அறிவிப்பு … திமுக தொழிற்சங்கமான தோமுசாவும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு.

*பல இடங்களில் அரசு பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளானதாக புகார் … தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் இருந்ததாகவும் தகவல்.

*சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை முன்னின்று நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ள தொழிலாளர்கள் பல இடங்களில் பேருந்துகளை இயக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம்…. அனைத்து போக்குவரத்து பணிமனை களுக்கும் போலீ்ஸ் பாதுகாப்பு.

*மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தான் அமைத்த குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திரும்பப் பெற்றார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது திரும்பப் பெற்றுள்ளார் ஆளுநர்.

*அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு … ரொக்கத் தொகையுடன் பச்சரிசி உள்ளிட்ட ரொக்கத் தொகையை அளிக்கவும் உத்தரவு.

*பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு … விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

*மக்களவை தேர்தல் வரவுள்ளதால் 10,11,12- ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு… தேர்வு அட்டவணை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவைத் தேர்தல் தேதி இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கம்.

*நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி உறுதியானதும் அதிமுக வேடபாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் … சென்னையில் கட்சி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்,

*நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் அனைத்து நிர்வாகிளுடன் இணைந்து செயல்படுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் … கூட்டணி அமைக்கும் கட்சிகளுடனும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள்.

*சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதால் அவர்களுக்கான மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது… சென்னையில் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தகவல் … சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

*சென்னைக்கு குடி நீர் வழங்கும் வீராணம் ஏரியில் பேரழிவை ஏற்படுத்தும் நுண் கிருமிகள் அதிக அளவில் கலந்து உள்ளதால் தண்ணீர் நச்சுத் தன்மை கொண்டதாக மாறி உள்ளது .. கிருமிகளை ஒழித்து வீராணம் ஏரி நீரை தூய்மைப்படுத்துமாறு அன்புமணி வலியுறுத்தல்.

*நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் பயணம் செய்து பாஜக தொண்டர்களை ஊக்குவிக்க பிரதமா மோடி திட்டமிட்டு இருப்பதாக தகவல் … மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரை இடைவிடாது பயணிக்க உள்ளதாகவும் செய்தி.

*பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள சுசான சேத் என்ற 39- வயது பெண் கோவாவில் விடுதியில் வைத்து தமது நான்கு வயது மகனை கொனறு பெட்டியில் அடைத்துக் கொண்டு கர்நாடகா திரும்பினார் … சுசான சேத் – ஐ சித்ரதுர்காவில் கைது செய்து கோவா மாநில போலீஸ் விசாரணை.

*முது நிலை மருத்து படிப்புகளில் சேருவதற்கு மார்ச் மூன்றாம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு, ஜுலை 7 – ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு …. ஆகஸ்ட் 15- ஆம் தேதி கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு.

*மாலத் தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிளை அனுப்பி வைக்குமாறு அந்த நாட்டு அதிபர் முகமுது முய்யூசு, சீனா நாட்டுக்கு வேண்டுகோள் … பிரதமர் மோடியை மாலத் தீவு அமைச்சர்கள் விமர்சித்ததால் இந்தியர்கள் பலர் தங்களின் மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்ததால் முய்யூசு மாற்று நடவடிக்கை

*தென்கொரியாவின் நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள நாய்கறி சாப்பிடும் சாப்பிடும் பழக்கத்திற்கு தடை வித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம் … மொத்தம் உள்ள 208 உறுப்பினர்களும் புதிய சட்டத்திற்கு ஆதரவு.

*திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது…கொடைக்கானலில் 4 மணிநேரம் தொடர்ந்து கனமழை, பழனி நகரத்தில் நல்ல மழை பெய்ததால் சாலைகள் வெள்ளக்காடானது.

*காவிரி டெல்டா,மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று கன மழை கொட்டிய நிலையில் இன்று இயல்பு நிலை நிலவியது… டெல்டாவில் நேற்று பெய்த மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீ்ர் தேங்கி நிற்பதாக புகார்.

*தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் … ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.

*தேமுதிக தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் நினைவுக் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் … நடிகர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பு,

*நடிகர் ரஜினி காந்த் தற்போது நடித்து வரும் வேட்டையன் படம் முடிந்த பிறகு நடிக்க உள்ள அடு்த்த படம் பற்றி புதிய தகவல் … இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *