தலைப்புச் செய்திகள் (07-01-2024)

*சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து வந்துள்ள தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பு … மாநாட்டின் இலக்கான ரூ 5.5 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து ஆனதாக தமிழக அரசின் தொழில் துறை செயலாளர் அருண் ராய் தகவல்.

*உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ஹூண்டாய் நிறுவனம் – கூடுதலாக ரூ, 6180 கோடி , அமெரிக்காவின் First Solar நிறுவனம் – ₹5600 கோடி . கோத்ரேஜ் நிறுவனம் – ரூ,515 கோடியும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக அறிவிப்பு … டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ள ரூ,12,082 கோடி முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தகவல்.

*பெகட்ரான் நிறுவனத்தின் ரூ,1000 கோடி முதலீட்டால் 8000 பேருக்கும் JSW நிறுவனத்தின் ரூ,10,000 கோடி முதலீட்டால் 6600 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்ககும் என்று அறிவிப்பு .. மேலும் TVS குழுமம் ரூ,5000 கோடியும் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் – ரூ,200 கோடி செய்வதற்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம்.

*பிரதமரின் இதயத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது என்று முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு .. இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மகத்தானது என்றும் கருத்து.

*மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும்… போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தள்ளதை அடுத்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவிப்பு

*போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் ஜனவரி 9- ஆம் தேதி யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை… வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மேலாண் இயக்கநர் எச்சரிக்கை.

*போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகிகளுடன் நாளை காலை சென்னையில் பேச்சு வார்த்தை .. அமைச்சர் சிவசங்கர் ஏற்பாடு.

*பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள போராட்டம் நடத்த முடிவு.

*நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏற்கனவே ஒருவரை கொன்ற சிறுத்தை நேற்று மீண்டும் தாக்கியதில் 3 வயது சிறுமி இறப்பு … வனத்துறை அலுவலர்களின் தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு.

*பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் தொடங்கியது … ஐனவரி 9- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு.

*பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மீது பாஜக தலைவர் அண்ணாமலை புகார் … பத்திரப் பதிவு அலுவலகங்களில் தரகர்களை நியமித்து தினமும் கோடிக்கணக்கில வசூலிப்பதாக குற்றச்சாட்டு.

*திருச்செந்தூர் – திருநெல்வேலி தடத்தில் 20 நாட்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது … கன மழையால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டதால் கடந்த 17- ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவில்லை.

*தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்து 11- வது நாள் நினைவு தினம் … சென்னை கோயம்பேட்டில் 3 ஆயிரம் பேர் அமைதி ஊர்வலம்.

*தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு … மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வலைத்தளப் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம் … தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகாந்த், கர்நாடக மாநிலத்தில் ஐ.எ.எஸ். அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

*லட்சத் தீவுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு கடலில் குளித்த, படத்தை வெளியிட்டதை அடுத்து கடற்கரை சுற்றுலாவை தங்களுக்கு எதிரராக ஊக்குவிக்க இந்தியா முயற்சிப்பதாக மாலத் தீவு நாடு விமர்சனம் … மாலத் தீவு நாட்டு அமைச்சர்கள் கடினமான சொற்களைப் பயன்படுத்தி வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டதால் சர்ச்சை.


*சர்ச்சைகளை அடுத்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல இருந்த இந்தியர்கள் பலர் தங்களின் பயணத்தை ரத்து செய்து உள்ளதாக வலைதளங்களில் பதிவு .. . ‘BoucottMaldives’ என்று இந்தியர்கள் உருவாக்கிய ஹேஸ்டாக் வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது.

*இந்தியா பற்றி அவதூறான கருத்துகளை வலைதளங்களில் பதிவிட்ட புகாரின் பேரில் அமைச்சர்கள் மரியம் சுலானா, மால்ஷா, ஹாசன் ஜிகான் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக மாலத் தீவு அரசு தகவல் … இந்திய சுற்றுலா பயணிகள் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்ததால் சுற்றுலா தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டதால் நடவடிக்கை.

*பங்களாதேஷ் நாட்டில் பெரும் பரபரப்புக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடந்து முடிந்தது … வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கியதால் நாளை முடிவுகள் வெளியாகிறது.

*காபந்து அரசின் மேற்பார்வையில் பங்களாதேசின் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பி.என்.பி.கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை .. . மூன்றாவது முறை பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினாவின் அவாமீ லீக் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு.

*அமெரிக்காவில் நேற்று முன் தினம் அலஸ்கா ஏர்லைன்சின் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ என்ற விமானம் நடுவானில் பறக்கும் போது கதவு திடீரனெ கீழே விழுந்ததன் எதிரொலி … இந்தியாவில் இயக்கப்படும் அதே ரக பயணிகள் விமானங்களை உடனடியாக சோதித்துப பார்க்க விமான கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு.

*நடுவானில் விமானத்தின் கதவு உடைந்து விழுந்ததை அடுத்து போயிங் ‘737 மேக்ஸ் 9’ என்ற ரக விமானங்கள் பறப்பதற்கு தற்காலிக தடை விதிப்பு .. அமெரிக்காவில் 171 விமானங்கள் நிறுத்தப்பட்டதால் 23 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியாமல் தவிப்பு.


*பிரபல திரைப்பட நடிகை சரோஜா தேவியின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமானவர்கள் வாழ்த்து மழை… எம்.ஜி.ஆர்.உடன் எங்கள் வீட்டுப் பிள்ளை, படகோட்டி உட்பட 26 படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

*தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12- ஆம் தேதி வெளியாகிறது … சிவகார்த்திகேயன் நடித்து உள்ள அயலான், ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள மிஷன் சேப்டர் 1 ஆகியவை பொங்கலுக்கு வெளியாக உள்ள மற்ற படங்கள் ஆகும்.

*சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் காலை முதல் லேசான மழை .. காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி. மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல்.


*விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் இரண்டு நாட்களாக கன மழை … சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி கிராமங்கள் துண்டிப்பு.

*மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில தொடர்ந்து கன மழை பெய்வதன் எதிரொலி … தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை.

*கடுமையான பனி மூட்டம் … தலைநகர் டெல்லியில் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *