தலைப்புச் செய்திகள் (04-02-2024)

*ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் சம்பல் சோரன் அரசு மீது சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு … ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் ராஞ்சிக்கு பயணம்.

*ஜார்கண்டில் சட்ட மன்றத்தில் மொத்தம் உள்ள 81 உறுப்பினர்களில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக தகவல் …முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதால் புதிய முதல்வராக பதவியேற்றார் சம்பல் சோரன்.

*நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக நிர்வாகிகள் குழு சென்னையில் மார்க்சி்ஸ்ட் மற்றும் மதிமுகவுடன் பேச்சு வார்த்தை… கூடுதல் தொகுதிகளை கேட்டு உள்ளதாக பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு கட்சி நிர்வாகிகளும் பேட்டி,

*எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது; 2 படகுகள் பறிமுதல்….அனைவரையும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை விசாரணை.

*தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி பயணம் …தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி12- ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஆளுநர் ரவி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல்.

*அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் முன் அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்க அதிமுக முடிவு … பொது மக்களை நாளை முதல் சந்தித்து கருத்துக் கேட்க முடிவு

*பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டான பிப்வரி 11-ஆம் தேதி சென்னையில் பாஜக நாடாளுமன்ற தேர்தல் பணி குழு மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குழு நிர்வாகிகளை சந்திக்க திட்டம்… சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு.

*சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும்ட கார்த்தி சிதம்பரத்துக்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு நிலவுவதாக தகவல்… இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்புத் தரக்கூடாது என்று எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி.

*தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர்விஜய்க்கு இயக்குநர் டி.ராஜேந்தர் வாழ்த்து… நான் பண்ணவில்லை விமர்சனம், தமிழ் நாட்டுக்குத் தேவை விமோச்சனம் என்று டி.ஆர்.கருத்து.

*அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி … தளபதியோடு கை கோர்த்து தமிழ்நாட்டை ஆள்வோம் என்று விஜய் ரசிகர்கள் போஸ்ட்ர்.

*புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியல் காங்கிரஸ் வேட்பாளராக இந்த தேர்தலிலும் வைத்திலிங்கம் போட்டியிடுவராம் … வைத்திலிங்கம் பெயரை மேலிடத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்.

*மாநிலத்தில் உள்ள கோவில் யானைகளில் வயதான யானையாக இருந்தாலும் சிறு குழந்தைபோல் சுறுசுறுப்பாகச் செயல்படுவதால் ஆன் ஆக்டிவ் எலிபன்ட் என்ற பட்டம் வழங்க நடவடிக்கை.

*அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்ப பள்ளிகளுக்கு 2582 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு எழுத்துத் தேர்வு … மாநிலம் முழுவதும் 41 ஆயிரம் பேர் ஆர்வமுடன் தேர்வில் பங்கேற்பு.

*சென்னை அருகே தாழம்பூரில் பட்டா இல்லாத இடத்தில் 482 அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விற்றதாக காசா கிரவுண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் … வேறு இடத்தில் வீடு கட்டித் தருவதாக கட்டுமான நிறுவனம் உறுதி.

*புதுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறிய லாரியுடன் கார் மோதி விபத்து .. . காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் இறப்பு,நான்கு போர் காயம்.

*சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இது வரை இல்லாத வகையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை… விளைச்சல் குறைந்ததன் காரணமான விலை உயர்வு என்று தகவல்.

*ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 -வது நாளாக இந்திய ஒற்றுமை பயணம் … தன்பாத் நகரத்தில் நடந்த கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு தண்ணீர் மற்றும் நிலத்துடன் வேலை வாய்ப்பும் கிடைக்க காங்கிரஸ் துணை நிற்கும் என்று உறுதி.

*டெல்லி மாநில அரசின் மதுபான ஊழல் தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை… ஆஜராக உத்தரவடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து உள்ள மனு மீது 7- ஆம் தேதி விசாரணை.

*ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதி போராளிகள் குழுவின் 36 நிலைகள் மீது அமெரிக்கா,பிரிட்டன் படைகள் மீண்டும் தாக்குதல்… செங்கடல் வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்துவதற்கு பதிலடி.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்போட்டியில் இரண்டாவது இன்னிங்கில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பு … இந்திய வீரர் சுப்மன் கில் அபாரமாக ஆடி104 ரன்கள் குவிப்பு. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 399 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம்.

*இந்தி நடிகை பூணம் பாண்டே தாம் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து விட்டதாக உறவினர்கள் மூலம் வதந்தி பரப்பியதால் சரச்சை… சமூக வளைதளத்தில் தவறான தகவல் பரப்பினால் தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் யாரேனும் வழக்குத் தொடர்ந்தால் நடிகைக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து.

*டெல்லி அருகே பிராமாண்டமான உணவு விடுதி திறந்துள்ளதற்காக நடிகை சன்னி லியோனுக்கு பலரும் பாராட்டு … ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வயிறு முட்ட சாப்பிடலாம் சன்னி லியோன் ஓட்டலில்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *