தலைப்புச் செய்திகள் (02-04-2024)

*சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு 25 -ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…. சம்மனுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.

*மக்களவை தேர்தலில் EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு .. இதுவரை நடந்த தேர்தல்களில் EVM, VVPAT இணைப்பாகவும் கன்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்ட நடைமுறையை பின்பற்ற உத்தரவிடுமாறு வலியுறுத்தல்.

*மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் …. நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தமிழ்நாடு அரசு பதில்.

*கச்சத்தீவு பற்றி காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பாஜக வுக்கு இலங்கையில் வசிக்கும் 35 லட்சம் தமிழ்ர்கள் பற்றி துளி்யும் கவலை இல்லாதது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி … கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று கடந்த 2015 ஆம் ஆண்டில் சொன்ன பாஜக இப்போது மாற்றிப் பேசுவதகாவும் கருத்து.

*சென்னைக்கு ரூ.5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளதாகவும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்திற்கு ரூ.900 கோடியை ஒதுக்கியதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் … மத்திய அரசு வழங்கிய நிதியைக் கொண்டு மழைநீர் வடிகால் பணிகளை செய்திருந்தால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் கருத்து.

*நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு … பொதுமக்கள் தங்கள் வாக்கு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு வசதி.

*ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே … முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறுவதற்கு வாய்ப்பு

*சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீதான ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு: திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர்… டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரா அமீரிடம் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு பற்றி கேள்வி

*போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேரின் நிதிமன்றக் காவல் முடிவடைந்ததால் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் … மேலும் 15 நாட்களுக்கு காவல் நீடிப்பு.

*தமிழ் நாட்டில் எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மீது 561 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் … வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

*ஆந்திராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்… ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி.

*டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது…. அமலாக்கத்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால் சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக எடுத்து்கொள்ளக்கூடாது என்றும் கருத்து.

*கேரள மாநிலம் வயநாடு தொகுதியில போட்டியிடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடிவு … மனுத்தாக்கலின் போது பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என்றும் தகவல்

*பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் தொகுதி பாஜக எம்.பி அஜய் குமார் நிஷாத் காங்கிரசில் இணைந்தார் … இரண்டு முறை எம்பியாக இருந்த அஜய் குமார் இந்த தேர்தலில் சீட் கிடைக்காததால் கட்சித் தாவல்.

*அருணாசலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா பெயரிட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் …. பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது , இதனை இந்தியா முழுவ்து நிராகரிக்கிறது என்றும் கருத்து.

*பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துப் பொருட்கள் விளம்பரம் தொடர்பா க பாபா ராம் தேவ் கேட்ட மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு .. நீதிமன்றத்தில் அனைத்து உத்தரவுகளையும் மீறி விட்டு இப்போது மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்க முடியும் என்று7 ேோம் கேவ்வி.

*காசா முனை மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில ஜநா சார்பில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் இறப்பு … தவறுதலாக நடந்துவிட்டதாக இஸ்ரேல் விளக்கம்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *