கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதைத் தொடர்ந்து இன்று கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 135 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. பாஜக 65 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வரும் நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கர்நாடக வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.