பழைய தகவல் தான். ஆனால் தமிழ் திரை உலகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட காதல் கதை பற்றியது இந்த பதிவு.
சுமார் 30 ஆண்டுகளக்கு முன்பு பிரபுவையும்,குஷ்புவையும் வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தார் இயக்குநர் வி. சேகர். ஆனால் அந்தப்படம் கை விடப்பட்டது. அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார் ;
, “பிரபுவை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் குஷ்புவை, பிரபு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஒரு வதந்தி பரவி இருந்தது., ஆனால் பிரவுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது.
எனவே , படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என்று அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார்.
அந்த படத்தில் குஷ்புவிற்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.இந்த மாற்றம் பிரபுவுக்கு பிடிக்கவில்லை . அந்த படத்தையே மூட்டை கட்டி வைத்து விட்டேன் ” என்கிறார்,சேகர்.