ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை

50 ஆண்டுகளாக விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை- எம்.எல்.ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை

மே.1

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டு காலமாக விவசாய திட்டங்களுக்கு அரசு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினாலும் அது உற்பத்தியை பெருக்க மட்டும்தான் பயன்படுகிறது. உற்பத்தியாகும் பொருளை எப்படி, எங்கே விற்பனை செய்யலாம் எப்படி நல்ல விலை பெறலாம் என்ற திட்டங்கள் இல்லை. அரசு விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்வதைப்போல், உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவவேண்டும்.

உள்நாட்டில் வியாபாரம் செய்வது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வது என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும். விதைப்பது, உற்பத்தி செய்வது போன்ற அத்தனை திட்டங்களிலும் அரசு நிதி ஒதுக்கி உதவுகிறது. ஆனால், அறுவடை முடிந்தவுடன்
அரசு தப்பித்துக் கொள்கிறது. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. உற்பத்தி செய்யப் பொருளை விற்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். உற்பத்திக்கேற்ற விலையும் கிடைப்பதில்லை. இதனால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு, விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்குத் அவர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர். இந்த வேறுபாடுகளை அரசு கலைய அரசு முன்வரவேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *