மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு…
சென்னை ஓஎம்ஆர் – ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் துவங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த இறையன்பு பணிகள் குறித்து வரைப்படம் மூலம் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி, எம். சான்ட், இரும்பு கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.