2024ம் ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்காவின் சாலைகளுக்கு இணையாக அமைக்கப்படும்.. நிதின் கட்கரி

2024ம் ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்காவின் சாலைகளுக்கு இணையாக அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்னா கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் வார்த்தைகளை நான் அடிக்கடி சொல்வேன்.

அமெரிக்காவின் சாலைகள் நன்றாக இருக்கிறது, அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால் அல்ல. அமெரிக்கா தனது நல்ல சாலைகளால் பணக்கார நாடாக உள்ளது என்று ஜான் எஃப் கென்னடி கூறியுள்ளார். 2024ம் ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்காவின் சாலைகளுக்கு இணையாக அமைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.. இந்த சாலைகள் காரணமாக ராஜஸ்தானும் மகிழ்ச்சியான மற்றும் வளமான மாநிலமாக மாறும்.

அரசு மாறும் போது சமூகமும் மாற வேண்டும். வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். விவசாயிகளின் விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். நாட்டின் இறக்குமதிகள் நிறுத்தப்பட வேண்டும், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், விவசாயிகள் உணவு வழங்குபவர்களாகவும், எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாறி கோடீஸ்வரர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *