200 ஆண்டுகால பாரம்பரியம் – கூட்டுவண்டியில் குலதெய்வக் கோயிலுக்கு புறப்பட்ட ராமநாதபுரம் மக்கள்

மே.18

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள், குடும்பத்தினருடன் 15 நாள் பயணமாக கூட்டு வண்டியில் குலதெய்வக் கோயிலுக்கு புறப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கினர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு வண்டியில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார் பொண்ணு இருளப்பசாமி தைலாகுளம் வீரமாகாளி கோவிலுக்கு புறப்பட்டனர்.

200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மக்கள் கூட்டுவண்டியில் பயணித்து குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது வழக்கமாக இருந்துவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வழிபட பாரம்பரிய வழிபாட்டை மேற்கொள்ள முடியாமல் இருந்த கமுதி மக்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 56 கிராம மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *