16வது ஐ.பி.எல் திருவிழா – இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் இன்று மோதும் குஜராத், சென்னை அணிகள்

மே.23

சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 6 அணிகள் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறின.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான முதல் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில்,
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறும். தோல்வியுறும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும்.

சென்னையில் நடைபெறும் இன்றைய போட்டியில், குஜராத் அணியின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி 10-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *