மீனாவிடம் தேதி இல்லாததால்,
சிம்ரனை தேடி வந்த வாய்ப்பு:
அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி படத்தில் சிம்ரன் நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் மீனா .சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்கவில்லை..இது குறித்து மீனா சொன்ன தகவல்.
‘ வாலியில் நான்தான் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்- ஆனால் அப்போது உடல் நலக்குறைவு காரணமாக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நான் கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டது.
சில நாட்களில், அஜித் குணமாகி வீடு திரும்பினார். ஷுட்டிங் கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் கேட்கும்போது என்னிடம் தேதிகள் இல்லை. அந்த படத்தை மிஸ் செய்ய வேண்டியதாகி விட்டது’ என்று ‘பிளாஷ்பேக்’கை விவரித்தார், மீனா