தமிழ் திரை உலகத்தின் முன்னணி இயக்குநராக விளங்கிய கே, பாலசந்தர் அவர் இயக்கும் படங்கள் வென்றாலும் சம்பளத்தை உயர்த்த மாட்டார் என்று அவருடைய மகள்
புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார்.:
“தான் என்ன நினைக்கிறாரோ அது படத்தில் வர வேண்டும் என நினைப்பவர் அப்பா..இது தவிர, நடிக்கும் நடிகர்களுக்கு திருப்தியை கொடுக்க வேண்டும். நம்பி படம் பார்க்க வரும் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதில் சிலமுறை மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.
ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் செய்ததே இல்லை. தயாரிப்பாளர்கள் விரும்பி கொடுத்தால் வாங்கிக்கொள்வார். பணத்தை பற்றி கவலைப்படாமல், அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிடுவார்’ என்று மனம் திறந்துகூறியுள்ளார், இயக்குநர் சிகரத்தின் வாரிசு.