1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தாய் மூகாம்பிகை”. இந்த திரைப்படத்தில் அம்மனாக கே.ஆர் விஜயா நடித்திருந்தார்.
இசை ஞானி இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்
இந்த திரைப்படத்தில் ஒலித்தது தான் “ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ” என்கின்ற பாடல்.
இளையராஜா இன்றைக்கும் தனது கச்சேரிகளில் பாடும் முதல் பாடல், இதுவே,
இந்த பாடல் குறித்து கவிஞர் வாலி சொன்னது :
, “ராஜாவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது. தாய் மூகாம்பிகை படத்தில் உள்ள ஜனனி ஜனனி என்கிற பக்தி பாடலை வேறு யாரு வேண்டுமானாலும் பாடியிருக்கலாம், அது அருமையாக தான் இருந்துருக்கும். ஆனால் ராஜா பாடியதால் தான் அதில் ஒரு விதமான இயற்கை பாவம் இருந்தது.” என்று கூறினார், வாலி