ஜனநாயகன் படப்பிடிப்பின் கடைசி நாளில் விருந்து.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவரும் ‘இளையதளபதி’ நடித்து வந்த படம் ‘ஜன நாயகன்.
ஹெச். வினோத் இயக்குகிறார். விஜயுடன் பாபி தியோல், பூஜாஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விஜய்,தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முழு மூச்சாக நடந்து வந்தது,படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

படப்பிடிப்பின் இறுதி நாளில், பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘ ஜனநாயகன்’ வெளியாக உள்ளது.
—-

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *