—
டைரக்டர் பவித்ரன், அர்ஜுனை வைத்து படம் எதுவும் இயக்கவில்லை.
ஆனாலும் பவித்ரனால் அர்ஜுன், உச்சத்துக்கு சென்றார்.
எப்படி ?
ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன் ‘படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
அதே சமயத்தில் பவித்ரனின் ‘ஐ லவ் இந்தியா’படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார்.
கால்ஷீட் தேதிகள் உதைத்தன.
‘ஷங்கர் படம் முக்கியமா ? என் படம் முக்கியமா?’ என பவித்ரன் கேட்க, சரத்குமார், ஜென்டில்மேன் படத்தில் இருந்து விலகிகொண்டார்.
அதன் பிறகே ஜென்டில் மேன் படத்தில் அர்ஜுனை நடிக்க வைத்தார், ஷங்கர்.
‘ஐ லவ் இந்தியா ‘படு தோல்வி.
அர்ஜுன் படம் சூப்பர் ஹிட். ஜென்டில்மேன் படத்துக்கு பிறகே அர்ஜுன், உச்சம் தொட்டார்.