!இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் சரண்.இவர் அஜித் நடித்த காதல் மன்னன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்..
காதல் மன்னன் படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்திருந்தார்.
அந்த படத்தில் நடிக்க இரட்டை சம்பளம் கேட்டுள்ளார் ,எம்.எஸ்.வி.
எதற்கு ?
. இந்த படத்திற்காக 10 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி, அதில் 5 லட்சம் தனக்கும், 5 லட்சம் ராமமூர்த்திக்கும் என்று கூறியுள்ளார். அவர் கேட்டபடியே சம்பளம் அளிக்கப்பட்டது. 5 லட்சத்தைதான் எடுத்துக்கொண்டு ராமமூர்த்திக்கு 5 லட்சம் அளித்தார், எம்.எஸ்.வி.
ராம மூர்த்தி, எம்.எஸ்.வி.யின் சக இசை அமைப்பாளர். இருவரும் சேர்ந்து ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்தனர். ஒரு கால கட்டத்தில் இருவரும் பிரிய நேரிட்டது.