சூரி நடித்த ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை கடந்திருப்பதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. கடந்த 16 ஆம் தேதி வெளியான இந்தபடம் முதல் சில நாட்கள் குறைவாகவே வசூலித்தது.
ஆனால், நாளுக்கு நாள் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
திரையரங்கள் நிரம்பி வழிந்தன. ஹவுஸ் ஃபுல் போர்டுகள் மாட்டப்பட்டன.
தற்போது தமிழகத்தில் ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியைக் கடந்திருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
நாயகனாக நடித்த 3-வது படமும் வெற்றி என்பதால் சூரியும் ரொம்ப குஷி.
—