பாரதிராஜாவின்16 வயதினிலே. 1977-ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனறஎ
இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய 3 பாடல்கள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பாடல்
“செவந்தி பூ முடிச்ச சின்னக்கா!”
இந்த பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா இணைந்து பாடியிருந்தனர். உண்மையாக இந்த பாடலை முதலில் பாட இருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். இந்த பாடல் பதிவின்போது, எஸ்.பி.பி. லேட்டாக வந்துள்ளார்.அதே சமயம் அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால், அவரால் பாட முடியாத நிலையில், இளையராஜாவும், பாரதிராஜாவும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பியடி இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் மலேசிய வாசுதேவனை பாட வைக்க முடிவு செய்து, இளையராஜா அவருக்கு பாட்டு சொல்லி கொடுத்துள்ளார். மலேசியா வாசுதேவன் பாடிய அந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சில நேரங்களில் சில முடிவுகள் வெற்றிகரமாகக அமைந்து விடுகின்றன என்பதற்கு சின்னக்காவும் சான்றுதான்.