கலிஞர் வைரமுத்துவால் பாட்டு எழுதும் வாய்ப்புகள் தனக்கு குறைந்து விட்டதாக கங்கை அமரன் கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில் இளையராஜா இசையில் உச்சம் தொட்டார் என்றால், அவரது தம்பி கங்கை அமரன் இசை, இயக்கம், பாடல்கள், தயாரிப்பு என பல துறைகளில் தன்னை நிரூபித்துள்ளார்.
அவரது நேர்கானல்..
“அண்ணனுக்கும் எனக்கு சண்டை வந்திருக்கிறது., சில இடங்களில் வெளிப்படையாக திட்டிவிடுவேன். அதனால் என்னை விட்டுவிட்டார். நான் அவரிடம் 10 வருடமாக பேசுவதே இல்லை. நான் அவருக்கு பாடல் எழுதியதில்லை. அந்த நேரத்தில் தான் வைரமுத்து எனது இடத்தை பிடித்துவிட்டார்.
வைரமுத்து வந்தவுடன் எனக்கு சந்தர்ப்பங்கள் குறைய ஆரம்பித்தது.
வைரமுத்து வரவில்லை எ்னறால் எனக்கு எவ்வளவு பாட்டு கிடைத்திருக்கும்? நன்றாக யோசித்து பாருங்கள்.
. கவிஞராக இருப்பவர் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு, மென்மையாக பேசுவது தான் கவிஞரின் பண்பாடு” என்று அவர் கூறினார்