சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். தொடாந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மாதவன் உயிர் பிரிந்தது.
1993- ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின.இவற்றில் ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாக உச்சநீதி மன்றம் குறைத்தது. இவர் நாற்பது ஆண்டுகளை சிறையிலேயே கழித்து உள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *