விழுப்புரம் ஆவினில் வாங்கிய குல்பியில் “ஈ” – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் எதிரே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ளது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்துவருகிறார். இவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிலையம் எதிரே ஆவின் பாலகம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆவின் பாலகத்தில், குளுகுளு கோடை கொண்டாட்டம் என பேனர் அச்சிடப்பட்டு கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆவின் ஐஸ் கிரீம், ஆவின் குல்பி மற்றும் ஆவின் பால் பாக்கெட், ஆவின் நெய், ஆவின் பால்கோவா என அடுக்கடுக்காக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

அதில், ஏராளமான பொதுமக்கள் ஆவின் என்றால் தரமும் நாணயமும் இருக்கும் என்ற நோக்கில் அங்கு வந்து பால்பாக்கெட் மற்றும் ஆவின் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், கோடை காலம் என்பதால் குல்பி ஐஸ்கிரீம் போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஆவின் நிலையத்தில் 30 ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர் வாங்கிய ஆவின் குல்பியில் “ஈ” இருந்துதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஆவின் பாலகத்தில் உள்ள விற்பனைகளிடம் கேட்டதற்கு, ஆம்.. குல்பியில் “ஈ” தான் உள்ளது என்றும், நேற்றுதான் நாங்கள் ஆவின் பாலகத்தை எடுத்தோம் நேற்றுதான் உற்பத்தி செய்யப்பட்டதால் இதில் விலை பட்டியலும் இல்லை “ஈ” இருந்தது உண்மைதான் என்றும் கூறினார்.

இது குறித்து நீங்கள் அதிகாரியிடம் தெரியப்படுத்தவும் என்றும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்து தர வலியுறுத்த வேண்டுமெனவும் வாடிக்கையாளர் வலியுறுத்தினார்.

இதற்கு கடை உரிமையாளர் ஒப்புதல் தெரிவித்ததால், வாடிக்கையாளர் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். ஆவின் நிறுவனத் தயாரிப்பில் ஈ இருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *