மே.3
தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7 அல்லது 8 ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்றும் தெரிவித்த பாலச்சந்திரன், இதனால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தார்.