ஏப்ரல்.18
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 257வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின்பிறந்த நாளை ஆண்டுதோறும் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாளையொட்டி, அவர் பிறந்த இடமான, ஈரோடு மாவட்டம் அறச்சலூா் அடுத்த ஓடாநிலையில் அமைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள, அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் குஷி ஆனந்த், தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்லி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுமா? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு, இது தொடர்பான முடிவை விஜய்தான் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.