வருமானவரிக் கணக்குத் தாக்கலுக்கான ஆஃப்லைன் படிவங்கள் – வருமான வரித்துறை வெளியீடு

ஏப்ரல்.28

இந்தியாவில் 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

வருமானவரி தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் ITR படிவங்களை வெளியிடவில்லை என்றாலும், 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்த பிறகு ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறையின் இணையதளத்தின்படி, “2023-24-க்கான ITR 1 மற்றும் ITR 4-ன் எக்ஸெல் பயன்பாடுகள் தாக்கல் செய்யக் கிடைக்கின்றன. ஐடிஆர் 1 என்பது மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ள குடியுரிமை பெற்ற நபர்களுக்கானது. ITR 4 என்பது குடியுரிமை பெற்ற தனிநபர்கள், HUFகள் மற்றும் நிறுவனங்கள் ரூ. 50 லட்சம் வரை மொத்த வருமானம் கொண்ட பிரிவுகள் 44AD, 44ADA அல்லது 44AE என கணக்கிடப்படுகிறது.

ஆஃப்லைன் முறையில், வரி செலுத்துவோர் தொடர்புடைய படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வருமானவரித்துறையின் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இருப்பினும், ஆன்லைன் படிவத்தில் வரி செலுத்துவோர் நேரடியாக வருமான வரி போர்ட்டலில் தங்கள் வருமானம் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் ITR-களை எளிதாக தாக்கல் செய்ய, அவர்களின் நிறுவனத்தில் வழங்கப்பட்ட படிவம்16 தேவை. நிறுவனங்கள் படிவம் 16-ஐ வழங்குவதற்கான கடைசி தேதி ஜூன் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்குகளை தணிக்கை செய்யத் தேவையில்லாத வரி செலுத்துவோர் ITR-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *