‘லாட்டரி மன்னன்’ மார்ட்டினின் 457 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி!

May 16,2023

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 457 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 908 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2009 – 2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் பல்வேறு கட்டங்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது.

இந்த நிலையில் கொச்சி அமலாக்கத்துறை, லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள மார்ட்டினின் வீடு, மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகம் உட்பட 3 இடங்களிலும் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதன் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி மதிப்பிலான இருப்பு மற்றும் முதலீடு தொகை, அசையும் மற்றும் ,அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *