மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம் – அமைச்சர் ரகுபதி

May 31, 2023

மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமார் பேச்சுக்கு மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை , வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர்மதிவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்டஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “தமிழக அரசு எப்பொழுதும் ஒரே நிலைப்பாடுதான். மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம். கடந்த அதிமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பணம் கையாடல் நடந்தது. தற்போது கடைமடை வரைக்கும் மேட்டூர் நீர் சென்றடையும் வகையில் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிபோல ஏமாற்று வேலை செய்யவில்லை. ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட உள்ள நிலையில் 10 ஆம் தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். தூர்வாரும்ப ணிகள் நடக்காமல் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சி” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *