முன்னால் எம்.பி. சுட்டுக்கொலை. பத்திரிகையாளர் வேடத்தில் தாக்குதல் .

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. யும் அவருடைய சகோதரரும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முன்னால் எம். பி. யான அதிக் அஹமதுவின் மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி ஜான்சி அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடந்தது.

இதில், கடந்த 2019 முதல் சிறையில் இருந்து வந்த அதிக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இருவரையும் போலிசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரக்யா ( அலகாபாத்) நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது இருவர் மீதும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் முன்னாள் எம்.பி.யும் அவருடைய சகோதரரும் அதே இடத்தில் உயிழிழந்தனர். கொல்லப்பட்ட அதிக் அஹமது, அஷ்ரப் இருவரின் உடல்களையும் போலீசால் கைப்பற்றபட்டை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அசம்பாவிதங்களைத் தடுக்க பிரக்யாராஜ் நகர் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது ஏ.என்.ஐ., பத்திரிக்கையாளர் ஒருவரும், போலீசாரும் காயம் அடைந்தனர்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , அதிக் அஹமது, அஷ்ரப் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தோம்.அப்போது பத்திரிகையாளர்களுடன் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தான் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர் என்றார்.
உத்திரபிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது அதிக் அகமதுவுக்கான பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதலமைச்சர் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.

அதிக் அகமது மீது 100 க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. சிறையில் இருந்தபடியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *