‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு குரலில் முதல் பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியீடு – இயக்குநர் மாரி செல்வராஜ்.

May 17.2023

‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு குரலில் முதல் பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், அனைத்தயும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்” என்று கூறிஇருந்தார். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி, வடிவேலு, மாரி செல்வராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து, உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி அன்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, மாமன்னன் படத்தின் முதல் பாடல் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சோனி மியூசிக் சவுத் நிறுவனமும், இயக்குனர் மாரி செல்வராஜும் அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அறிவித்துள்ளனர். இந்த பாடலை வடிவேலு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *