மே.8
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (மே.9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.