பிரிஸ்பேனில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மே.24

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர்.

சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு நடைபெற்ற குஜராத்தின் தாண்டியா மற்றும் கர்பா நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்திய பிரதமர் மோடியை பாஸ் எனக் கூறி ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ் பாராட்டினார்.

பின்னர் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது வாழ்க்கை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் யோகா மூலம் இணைந்துள்ளோம்” என்றார். நீண்ட நாட்களாக கிரிக்கெட் மூலம் இணைந்திருந்த நாம், தற்போது டென்னிஸ் மற்றும் சினிமா மூலம் இணைந்திருக்கிறோம் என்றும் அவர் அப்போது கூறினார்.

மேலும், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முக்கிய மையமாக சர்வதேச பொருளாதார நிதியம் பார்ப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் வங்கி சேவைகள் சிக்கலை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் வங்கிகளை பலர் பாராட்டுவதாக கூறினார். இதேபோன்று ஏற்றுமதியிலும் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் ஒன்று புதிதாக திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *