கேரளா வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை..! பாதுகாப்பு பணியில் 5ஆயிரம் போலீசார்..!!

ஏப்ரல்.24

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளா வருகிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை மத்தியபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார்.

அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் சாலைமார்க்கமாகப் பயணித்து மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். பின்னர் பா.ஜ.க. இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார். இதைத் தொடர்ந்து, அன்றிரவு கொச்சியில் உள்ள தாஜ்மலபார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து, நாளை திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தது. மேலும், பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளத்தில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரம் கசிந்ததை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம், சென்டிரல் ஸ்டேடியம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *