ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வராததே இதற்கு காரணம் என்ற கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிறுவனங்கள் நடப்பாண்டில் 2- வது முறை பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலையை கிலோவிற்கு 8 ரூபாயும் உயர்த்தி உள்ளதாக பொன்னுசாமி தெரிவித்து உள்ளார். மேலும் தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவில் நியாயமான விலையில் நிர்ணயம் செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்