பால் பண்ணையில் பயங்கர தீவிபத்து ….18 பசுக்கள் உயிரிழப்பு!

14 Apr 2023

டெக்சாஸில் இருக்கும் சவுத்ஃபோர்க் டெய்ரி பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட பண்ணை தீ விபத்தில் மிக மோசமானது என தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் பண்ணையை உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தரப்பில் பகிரப்பட்ட புகைப்படங்களில் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ பிழம்புகள் வருவதும், அதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதையும் காண முடிகிறது. மேலும் மீட்பு பணிகள் மேற்கொண்டபோது தீ விபத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக பண்ணையை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. மிகப் பழமையான அமெரிக்க விலங்கு பாதுகாப்புக் குழுக்களில் உள்ள விலங்குகள் நல நிறுவனம் (AWI) ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழக்கும் பண்ணை தீயைத் தடுக்க கூட்டாட்சி சட்டங்களுக்கு இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளது. மேலும் ஒரு சில அமெரிக்க மாநிலங்கள் மட்டுமே பண்ணை கட்டிடங்களுக்கு தீ பாதுகாப்பு குறியீடுகளை அமைத்துள்ளது என்றும் அத்தகைய தீ விபத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க எந்த கூட்டாட்சி விதிமுறைகளும் இல்லை என்றும் AWI ஐ மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு AWI இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்கத் தொடங்கியதில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் 6.5 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளது என்றும் டெக்சாஸ் பண்ணையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமான தீ விபத்து என குறிப்பிட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *