தொடர் விடுமுறை எதிரொலி – வெளியூர் செல்ல அரசு பேருந்துகளில் 50,000 பேர் முன்பதிவு!

ஏப்ரல்.29

மே. 1ம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 3 நாள் தொடர் விடுமுறை என்பதல், கோவையிலிருந்து வெளியூர் செல்ல சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர். அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில், வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறை ஒரு புறமும், அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், வெளியூர் பயணம் செய்ய மக்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை நாடத் தொடங்கியுள்ளனர். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் இன்று முதல் 4 நாட்களுக்கு நிரம்பிவிட்டன.

அதன்படி, இன்று முதல் மே 1ஆம் தேதி வரை 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும். 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பேருந்துகளில் முன்பதிவு, பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். பயணிகள் கூட்டம் இன்று மாலையிலிருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *