காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களுக்கான குண்டு எரிதல் போட்டி – தூத்துக்குடி மாணவி 3-ம் பிடித்து சாதனை

மத்தியபிரதேஷ் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களுக்கான குண்டு எரிதல் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி 3-ம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராகவா நந்தம் என்பவரின் மகள் ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற கல்லூரி மாணவி கலந்துகொண்டார்.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் ப்ரித்தி சிவா பிச்சம்மாள் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு, தூத்துக்குடிராஜாஜி பூங்காவில் வைத்து நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அளவில் நடைபெற்ற குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 3-இடம் பிடித்துள்ள மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதில், நடைபயிச்சி மேற்கொள்வோர் சங்கத்தினை சார்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் சேகர், பழனிவேல், துரைசிங்கம், செல்லத்துரை, ஜெகன், மணிகுட்டி, பிரபாகர்,சண்முகம், லெட்சுமணன், சந்தனம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *