துருக்கி தேர்தலில் வாக்களித்த உயரமான பெண்…. தேர்தல் அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடு!

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார். Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24 வயதுடைய பெண் கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகில் மிக அதிக உயரமான பெண் என்று கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார்.

Weaver Syndrome என்ற அரியவகை மரபணு நோயுடன் பிறந்ததால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு நகர்வதில் சிரமம் காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

இதுப்பற்றி தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், அவரது வீட்டிற்கே சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *