துணை குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் கோகல் சந்த் – கேசரி தேவி தம்பதிக்கு 1951ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மகனாகப் பிறந்தார் ஜக்தீப் தன்கர். ராஜஸ்தானில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்த இவர், மறைந்த விஜய் சங்கர் வாஜ்பேயியின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கார்த்திகேய வாஜ்பேயியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவியேஷ் என்ற மகன் உள்ளார்.

ராஜஸ்தான் வழக்கறிஞர் சங்கத்தில் 1979ஆம் ஆண்டில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தொழில்முறை வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1987ஆம் ஆண்டில் ராஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரானார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 1990ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவியேற்றார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நாட்டின் துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தன்கர்.

இந்நிலையில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜகதீப் தன்கர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் சட்டத்தின் வளமான அறிவு மற்றும் புத்திசாலித்தனத்திற்காக மதிக்கப்பட வேண்டியது. நமது பாராளுமன்றத்தை மேலும் பலனளிக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் , மாண்புமிகு திரு ஜகதீப் தங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நமது நாட்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *