திருப்பதி கோயிலில் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்

May 28, 2023

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இப்போது ‘ரகு தாத்தா’ என்ற படத்தை முடித்துள்ளார்.

‘ரிவால்வர் ரீட்டா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சகோதரி ரேவதி சுரேஷ், தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோருடன் திருப்பதிக்கு கீர்த்தி சுரேஷ் நேற்று வந்தார். அதிகாலை விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார்.

பின் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களைப் பெற்று கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு வேத ஆசி வழங்கப்பட்டது.

கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், “நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. என் சகோதரி ரேவதி சுரேஷ் குறும்படம் இயக்கி இருக்கிறார். தெலுங்கில் நான் ‘போலோ சங்கர்’ படத்தில் நடித்து வருகிறேன்” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *