திருடு போன செல்போன்களை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்… இன்று முதல் புதிய திட்டம் அமல்..!

மே 17,2023

கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.

தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு உருவாகியுள்ள புதிய திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் போன்களை பிளாக் செய்து அவற்றை டிராக் செய்ய அகில இந்திய அளவில் ஒரு கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக CEIR என்ற அதாவது மத்திய உபகரண அடையாளப் பதிவு தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாடு இன்று முதல் தொடங்குகிறது.

திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்கள் குறித்து புகாரளிப்பதை எளிதாக்கி அவற்றை பிளாக் செய்வதே CEIR இன் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம் செல்போன்கள் திருடப்படும் எண்ணிக்கை குறைந்து, திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்களை காவல்துறையினர் உதவியுடன் கண்டறியலாம்.

அத்துடன் குளோன் செய்யப்பட்ட அல்லது போலியான மொபைல்களைக் கண்டறிவது எளிதாக்கப்பட்டுள்ளது. குளோன் செய்யப்பட்ட மொபைல்களின் பயன்பாட்டை இதன்மூலம் கட்டுப்படுத்த முடியும். அண்மையில், கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.

டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட சில தொலைத் தொடர்பு வட்டங்களில் CEIR அமைப்பின் முதல் கட்ட செயலாக்கத்தை இயக்கி வருகிறது. மேலும் இந்த அமைப்பு இன்று முதல் இந்தியா முழுவதும் இயங்கவுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் அனைத்திலும் 15 இலக்க தனித்துவ எண் எனப்படும் IMEI எண்ணை அரசு கட்டாயமாக்கியுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் CEIR அமைப்பு சாதனத்தின் IMEI எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு கருவியின் தெரிவுநிலையை கண்டறியலாம். இந்த தகவலின் அடிப்படையில் தொலைந்த மற்றும் திருடு போன போனை கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *