தலைப்புச் செய்திகள் (31-01-2024)

*ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஹேமந்த் சோரன் கைது… நில மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை.

*ஹேமந்த சோரன் ராஜினாமாவை அடுத்து அவருடைய மனைவி கல்பனாவை முதலமைச்சசராக பதவியில் அமர்த்த முடிவு … ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியானது காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது.

*குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு … மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிக்கை.

*அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று அடக்குமுறை சட்டங்களை கடுமையாக எதிர்க்கும் … சி.ஐ.ஏ. சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் நாள் முழுவதும் தங்கி ஆய்வு.

*மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் … குறை தீர்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு வேண்டுகோள்.

*நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை … மொத்த தொகுதிகள் மற்றும் விரும்பு தொகுதிகள் எவை என்ற விளக்கங்களை இரண்டு கட்சிகளிடம் அதிமுக தலைமை கோரியுள்ளதாக தகவல்.

*நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். .. தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தகவல்.

*சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க ஏற்பாடு… 400 மீட்டர் நீளத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் ஆகாய நடைபாதை அமைக்க திட்டம்.

*தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளை இன்னும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா என்று பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி … ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

*தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்… தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் டெல்லி அனுப்ப சாகுவின் தனி செயலாளர் தபால் நிலையம் சென்றபோது காணாமல் போனதாக புகார் மனுவில் விளக்கம்.

*கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் திட்டம்…. உதகமண்டலம் அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்.

*புதுக்கோட்டை அருகே வாகனத்தில் வந்த இரண்டு பேரை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு நகை மற்றும் பணம் கொள்ளை … தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

*நீலகிரி மாவட்டம் கோத்தகிரி லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் கரைவெட்டி பறைவைகள் காப்பகம் ஆகிய இரண்டு சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் … தமிழ்நாட்டில் ஏற்கனவே 14 ராம்சர் தளங்கள் உள்ளன.

*நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது… ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணிக்கிறோம் என்று திரௌபதி முர்மு பெருமிதம்.

*எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. என்று நாடளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கருத்து … பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள்.

*மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தி்ன் போது மர்ம நபர்கள் தாக்குதல் …. ராகுலின் கார் கண்ணாடி உடைந்ததால் பதற்றம்.

*மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் … கடந்த முறை அனுப்பிய சம்மனுக்கும் ஆஜராகத கெஜ்ரிவால் இந்த ஐந்தவாது சம்மனுக்காவது ஆஜராவரா என்று எதிர்பார்ப்பு.

*உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில், முன்பு சீல் வைக்கப்பட்ட அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி … அடித்தளத்திற்குள் செல்வதற்கு வசதியாக தடுப்புகளை அகற்றுமாறும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு.

*நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பரபரப்பு தகவல் … புகைக் குண்டு வீசியதில் முக்கிய பிரமுகர்களையும் சேர்த்துக் கூறுமாறு மின்சாரத்தை உடலில் செலுத்தி போலீசார் கொடுமை செய்ததாக புகார்.

*மேற்கு வங்க மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால் கொல்கத்தாவில் பிப்ரவரி 2- ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் … முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை.

*சண்டிகார் மாநகராட்சிக்கு நேற்று நடைபெறற் மேயர் தேர்தல் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு… ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்த போதிலும் பாஜக வெற்றிப் பெற்றதாக அறிவித்ததால் சர்ச்சை,

*உத்தரபிரேதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாடி கட்சி அறிவித்ததற்கு அதனுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கண்டம் … தாங்கள் கேட்கும் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார்.

*பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மேலும் ஒரு வழக்கில் இன்று 14 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு … நேற்று ஒரு வழக்கில் இம்ரானுக்கும் அவருடைய மனைவி புஷ்ரா பீபிக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பரபரப்பு அடங்கும் முன் மற்றொரு வழக்கில் தண்டனை..

*பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் கடந்த ஆகஸ்டு முதல் சிறையில் உள்ளார்…. சிறைத் தண்டனைகள் காரணமாக பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் போட்டியிட முடியாது.

*ஸ்மார்ட்போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம் என்று சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் அறவிப்பு … நுரையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம் என விளக்கம்.

*ஊழல் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் உலக அளிவில் இந்தியாவுக்கு 93- வது இடம் … வெளிப்படையான நிர்வாகம் என்ற அமைப்பு 180 நாடுகளின் நிர்வாகம் பற்றி நடத்திய ஆய்வின் முடிவு வெளியீடு.

*நடிகை திரிஷா பற்றிய சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை நடிகர் மன்சூர் அலிகான் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்தியே ஆக வேண்டும் …தடை கேட்டு மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *