தலைப்புச் செய்திகள் (14-04- 2024)

*ஈரான்-இஸ்ரேல் இடையே போர் மூண்டது…. இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல். இந்திய நேரப்படி இன்றிரவு ஈரான் வெளியிட்ட தகவலில் தாக்குதலை நடத்தி முடித்துவிட்டதாக அறிவிப்பு.

*இஸ்ரேலின் ராணுவத் தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் என்று ஈரானும் தகவல்…. மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை.

*கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 ஈரான் ராணுவ அதிகாரிகள் இறப்பு … தூதரகம் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி

*அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் .. ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைப்பு.

*இஸ்ரேல் மீதான தாக்குதலை ணஅடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை. .. பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்.

* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடை முறைக்கு வரும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு ….நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும் 2025ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும்…க்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும் என்பதும் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்.

*பாஜகவின் தேர்தல் அறிக்கையி்ல் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் … மக்களின் வாழக்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகளைக் கூட காங்கிரஸ் விவாதிகக மறுப்பதாகவும் புகார்.

*கடந்த பத்தாண்டுகளில் உத்திரபிரதேசத்துக்கு ரூ 18.5 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்தது ரூ 5.5 லட்சம் கோடிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் … மத்திய பாஜக அறிக்கையின் எத்தனை பொய்களை நாடு தாங்கும், எங்கள் காதுகள் பாவமில்லையா என்றும் கேள்வி.

*தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்தது …. அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் கடைசி கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம்.

*வாக்குப் பதிவை அமைதியாக நடத்த தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70ஆயிரம் போலீசார் பாதுகாப்பு … வாக்குச் சாவடியில் பிரச்சினை என்றால் அடுத்து ஐந்து நிமிடத்தில் அந்த இடத்திற்கு ரோந்து போலீசர் சென்றடையும் படி சிறப்பு ஏற்பாடு

*போதை பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ….2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் சென்னையை சேர்ந்த முஜிபுர், முகேஷ், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார், சதானந்தம் ஆகியோரும் சிறையில் உள்ளனர்.

*இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற திமுகவின் தேர்தல் விளம்பரம் இந்தியாவின் இறயைான்மைக்கு எதிராக உள்ளதாக தேர்தல் ஆணையம் அனுமதி கொடுப்பதில் தாமதம் ,,, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு மீது நாளை விசாரணை.

*சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக நீதிமன்ற உத்தரவுப்படி உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என நேற்றிரவு உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சுப்பிரமணியம் நேரில் ஆய்வு…. மணி மண்டபத்தை நேரில் பார்வையிட்டதில் திருப்தி அடைந்த நீதிபதி, கூடுதலாக 2 கூடாரங்கள் மட்டும் அமைக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி தீர்ப்பு.

*டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் , அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி நாளாகவும் கொண்டாட்டம் … சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகளை வழங்கியும் அம்பேத்கருக்கு புகழாரம்.

*தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக புதிய ஆண்டு அமையட்டும் … அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும் என்றும் பிரதமர் மோடி X தளத்தில் தமிழில் பதிவு.

*தமிழ்நாட்டு கடற்பரப்பில் எப்ரல் 15 முதல் ஜுன 14 வரையிலான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று இரவு முதல் அமல் … சென்னை காசிமேட்டில் மீன் விலை அதிகரிப்பு.

*திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார் பிரதமர் மோடி… நெல்லை, கன்னியாகுமரி. தூத்துகுடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரவு திரட்ட நடவடிக்கை.

*மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்….அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை.

*இஸ்ரேல் நாட்டு நிறுவனத்திற்கு சொந்த மான கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 17 பேரை பாதுகாப்பாக மீட் க நடவடிக்கை …ஈரான் நாட்டு அதிகாரிகள் உடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

*இயக்குநர் சுந்தர் சி.இயக்கி உள்ள அரண்மனை – 4 திரைப்படத்தின் அச்சச்சோ என்ற ப்ரோமோ பாடல் காலையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு … ஏப்ரல் 26 ஆம் தேதி அரண் மனை நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

*பிரபல மலையாள நடிகரான நிலின் பாலி நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு ,, புதிய படத்தை ஜார்ஜ் ராய் மற்றும் சஞ்சய் குமார் இருவரும் இயக்குவதாக தகவல்.

*தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் நூறு சதவிகிதத்திற்கும் அதிகமான வெப்பம் பதிவு .. அதிக பட்சமான ஈரோட்டில் 103 டிகிரி பாரண்ஹீட் … சேலம்,திருப்பத்தூரில் 101.5 டிகிரி, வேலூரில் 100.7 டிகிரி பாரண்ஹீட் வெப்பம் பதிவு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *