தலைப்புச் செய்திகள் ( 14-03-2024)

*பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு…மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்…

*சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது…. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

*பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு…நிறுவனங்கள் அளித்த தொகை மற்றும் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது…

*மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம்… மம்தா சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயம் ஏற்பட்டதாக தகவல்…

*கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்விந்தர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.

*குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை…குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.

*போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் குடோனுக்கு சீல்…சென்னையில் NCB அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…

*போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி…ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி மீண்டும் திட்டவட்டம்…

*வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… நான்காயிரத்து 181 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களும் தொடங்கி வைப்பு…

*பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீஸ் வழக்கு…..கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு…உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு.

*போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்….முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை

*நாளை முதல் கோயில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம்…தமிழ்நாட்டில் உள்ள 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை…..சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

*துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை.

*அம்பேத்கர் சிலைகளை தகர்க்கப் போவதாக தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்ததன் எதிரொலி…..தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.

*தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.…. ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன….

*கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…. கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நடத்திவரும் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம்…திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு.

*மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் 21 நாட்களில் உலக முழுவதும் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவிப்பு …கேரளாவிற்கு வெளியில் அதிகம் வசூல் செய்தப் பட்ம் என்ற பெருமையை பெற்றது மஞ்சுமெல் பாய்ஸ்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *