தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. மே.1ம் தேதி 14 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. கிட்டத்தட்ட 10 முதல் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி கடந்து பதிவானது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று (ஏப் -28) நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை ஈரோடு, கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏப்ரல் 30ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மே 1ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மே. 2ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *