பொதுத்தேர்வு நிறைவு - கொண்டாட்டம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – திருப்பூரில் கொண்டாடி மகிழ்ந்த மாணவிகள்

ஏப்ரல்.21

தமிழகத்தில் நடைபெற்றுவந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனை, மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4216 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். அதில் 37,798 பேர் தனித்தேர்வர்கள். 13,151 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 பேர் மூன்றாம் பாலினத்தவர். 2,640 பேர் சிறை கைதிகள். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வுகளில் முறைகேடுகளை நடைபெறாமல் தடுக்கும் வகையில், 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

கடந்த வாரங்களாக நடைபெற்றுவந்த பொதுத்தேர்வின் இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 106 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30,687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் 1,484 பேர் என மொத்தம் 32,171 பேர் இந்தத் தேர்வை எழுதினர். அதன் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையமான திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகள், ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்தும், கட்டி அனைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி, மே 3ம் தேதிவரை நடைபெறுகிறது. இதையடுத்து, மே மாதம் 2வது அல்லது 3வது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *