தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன தகவல்!

May 26, 2023

 

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் பள்ளி ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 1ஆம் தேதி அன்றும், 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி அன்றும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோடை வெயில் குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியனர் என பலதரப்பினரும் அரசை வலியுறுத்தினர். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *