தமிழகத்தில் கல்வி முறையையே மாற்ற வேண்டும் …. ஆர்.என்.ரவி பேச்சு

June 05, 23

இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும் என ஊட்டியில் நடந்த மாநாட்டில் கவர்னர் ரவி பேசுகையில் குறிப்பிட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ் பவனில் ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் ஊட்டி ராஜ்பவனில் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று (ஜூன் 05) துவங்கி வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.

கருத்தரங்கை கவர்னர் ரவி இன்று துவக்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலை துணைவேந்தர் அலோக்குமார் ராய், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை துணைவேந்தரும், யு.ஜி.சி.,யின் இந்திய மொழிகளில் பாட புத்தகம் தயாரிக்கும் குழுவின் தலைவருமான நாகேஸ்வர ராவ். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரி புத்தா சந்திரசேகர் ஆகியோர், துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினர். இதில், 18 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 7 தனியார் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், 2 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழக கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *