கோவை வேளாண் பல்கலைக்கு அங்கீகாரம்

ட்ரோன் மூலம் காற்றின் தன்மையை அளவிடும் அமைப்பு – காப்புரிமையை பெற்றது கோவை வேளாண் பல்கலைக்கழகம்.!

மே.12

கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ட்ரோன் மூலம் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்திறகு ஆளில்லா விமானம்‌ மூலம்‌ மருந்து தெளிக்கும் முறையில் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமை மத்திய காப்புரிமை ஒன்றியத்தால்‌ வழங்கப்பட்‌டுள்ளது. ஆளில்லா விமானம்‌ மூலம்‌ பயிர்களை தாக்கும்‌ நோய்‌, களை மற்றும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்‌ முறை தற்சமயம்‌ மிகவும்‌ பிரபலமாகி வருகிறது. ஆளில்லா விமானத்தில்‌ உள்ள இறக்கையின்‌ மூலம்‌ ஏற்படும்‌ காற்றின்‌ விசையை அளவீடு செய்ய பிரத்யேகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தனித்துவம்‌ வாய்ந்த அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மூலம்‌ ஆளில்லா விமானத்தை பல்வேறு உயரங்களில்‌ மற்றும்‌ எடைகளில்‌ இயக்கி அதன்‌ மூலம்‌ உருவாகும்‌ காற்றின்‌ விசையின்‌ தன்மைகளை பற்றி அறிந்து கொள்ள உபயோகப்படுகிறது. இந்த அமைப்பானது அடிப்பாகத்தில்‌ 50 மிமீ x 25 மிமீ x 2 மிமீ செவ்வக வடிவ குழாய்களும்‌ மேற்புறத்திலும்‌, அதே அளவுள்ள குழாய்களாலும்‌ மற்றும்‌ இரண்டையும்‌ இணைக்கும்‌ வகையில்‌ 40 மிமீ x 40 மிமீ x 3மிமீ‌ இரும்பிலான L வடிவ பட்டைகளை கொண்டும்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில்‌ (frame) மேற்பகுதியில்‌ தூரத்தை அளவீடு செய்யக்‌ கூடிய லேசர்‌ ஒளி கற்றையில்‌ இயங்கக்கூடிய கருவி பொருத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால்‌ ஆளில்லா விமானம்‌ இயக்கப்படும்‌ உயரத்தை அளக்க முடியும்‌. இறக்கைகளில்‌ இருந்து கீழ்நோக்கி வரும்‌ காற்றின்‌ விசையை அளவீடு செய்ய 0.00 மிமீ‌, 500 மிமீ, 1000 மிமீ, 1500 மிமீ மற்றும்‌ 2000மிம்‌ இடைவெளிகளில்‌, காற்று வேக அளவி (Anemometer) பொருத்த 20 மிமீ x 20 மிமீ x 2 மிமீ‌ அளவுள்ள சதுர வடிவ குழாய்‌ சட்டகத்தின்‌ நடுவே இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்‌ சட்டகத்தை சுற்றி வருமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்‌டிருக்கிறது.

இந்த அமைப்பின்‌ மூலம்‌ ஆளில்லா விமானத்தின்‌ இறக்கைகளில்‌ இருந்து கீழ்நோக்கி வரும்‌ காற்றின்‌ வேகம்‌ அதன்‌ பரவும்‌ தன்மை ஆகியவற்றை அளவீடு செய்து அதற்கேற்றாற்போல்‌ இணைப்புக்‌ கருவிகளை வடிமைக்கப்‌ பயன்படுத்தலாம்‌ என்று தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *