டெல்லியில் 8 மாத கர்ப்பிணி சுட்டுக்கொலை.. பகீர் தகவல்

அதிக சத்ததில் மியூசிக் கேட்டுக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரரை தட்டிக் கேட்ட கர்ப்பிணி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் உள்ள சம்யாபூர் பத்லி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரஞ்சு தனது கணவருடன் அங்கு வசித்து வருகிறார். திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான ரஞ்சு மீண்டும் கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அன்று அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஹரிஷ் என்ற நபர் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அதிக ஒலி எழுப்பும் வகையில் டிஜே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சத்தம் ரஞ்சுவை தொந்தரவு செய்த நிலையில், ஹரிஷை அழைத்து சத்தத்தை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரஞ்சு கேட்டும் சத்தத்தை அவர்கள் குறைக்கவில்லை. மீண்டும் பொறுக்க முடியாமல் அவர்களை அழைத்து சத்தத்தை குறைக்க கூறியுள்ளார். இதனால் அத்திரமடைந்த ஹரிஷ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரஞ்சுவை சுட்டுள்ளார். அப்போது குண்டு ரஞ்சுவின் கழுத்து பகுதியில் பாய்ந்தது.

பதறிப்போன வீட்டினர் ரத்த வெள்ளத்தில் இருந்த ரஞ்சுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒரு வாரம் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அண்டை வீட்டுகாரர் ஹரீஷை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து.

ஹரிஷ் பயன்படுத்திய துப்பாக்கி அவரது நண்பர் அமித் என்பவருக்கு சொந்தமானது என்பது விசராணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அமித்தையும் காவல்துறை கைது செய்துள்ளது. ரஞ்சுவின் மரணத்திற்கு சம்பவத்திற்கு சாட்சியாக அவரது கணவரின் சகோதரி உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *